காளமேகம் சிவனை இகழ்வது போல் புகழ்ந்த பாடல்
தீத்தான் உன் கண்ணிலே; தீத்தான் உன் கையிலே
தீத்தானும் உன் தன் சிரிப்பிலே, தீத்தான் உன்
மெய் எல்லாம்! புள் இருக்கும் வேளூரா; உன்னை இந்தத்
தையலாள் எப்படிச் சேர்ந்தாள்?
பொருள்:
உன் கண்ணிலே நெருப்புதான் (நெற்றிக்கண்), உன் கையிலும் நெருப்புதான் (நடராஜரின் கையில் இருக்கும் தீ ), உன் சிரிப்பும் நெருப்புதான் (திரிபுரத்தை சிரித்து எரித்த தீ) உன் உடலும் நெருப்புதான் (ஜோதி வடிவான ஈசன்), உன்னை எப்படி உமையவள் சேர்ந்தாள்?
No comments:
Post a Comment