Friday, November 22, 2013

கவி காளமேகம்



காஞ்சியில் மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய விநாயக பெருமானை இகழ்வது போல் புகழ்ந்து பாடிய காளமேகத்தின் பாடல் இது

மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும் 
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ?- மாப்பார் 
வலி மிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றது, ஏன்?

பொருள்: சிவனின் ஆயுதமான மழு (கோடாரி), பெருமாளின் ஆயுதமான சுதர்சன சக்கரம், பிரம்மனின் ஆயுதமாம் கதாயுதம் இவை யாவும் திருடு போய்விட்டதா? அடப்பாவமே! இத்தனை பெரிய மத யானையை சிறிய எலி இழுத்து போக விட்டனரே! ஏனோ?

In English

On seeing Lord Ganesh in his vahana "mouse" at Kanchipuram festival, poet kalamegam says this

Ohh, has Lord shiva's axe, Lord vishnu's sudharshan chakra and lord Brahma's Mace been stolen or what? how they let the little mouse to drag that massive elephant! what a pity?

No comments:

Post a Comment