ஹர்விந்தர் சிங்- இந்திய இளைஞனின் மன சாட்சி
சரத் பவாரின் கன்னத்தில் அறை விட்டு ஒரே நாளில் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஹர்விந்தர் சிங்,ஒரு தனி மனிதனாக இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய இளைஞர்களின் மனசாட்சியாகதான் பார்க்க வேண்டி இருக்கிறது. அதே போல அடி வாங்கிய சரத் பவாரும், ஒட்டு மொத்த ஊழல அரசியல்வாதிகளின் பிரதிநிதியாகத்தான் கருத வேண்டும். இது தனி மனித தாக்குதல் இல்லை. மக்களை வெறும் ஒட்டு போடும் எந்திரமாக நினைத்து இஷ்டம் போல செயல்படும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.
அன்னா ஹசாரே போன்றோரின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை"ஒரு அடி" முன்னே எடுத்து சென்றிருக்கிறார் ஹர்விந்தர். பாராளுமன்றத்தில் எல்லா கட்சிகளுமே பொத்தாம் பொதுவாக இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்திருக்கிறது.அது சரி. எல்லா அரசியல்வாதிகளுக்கும் உள்ளூர அந்த பயம் இருக்கத்தானே செய்யும். வெறுமனே "facebook" "twitter"ல் ஊழலுக்கு எதிராக வாக்களித்துவிட்டு அடுத்த நாள் வழக்கமான வேலைக்கு திரும்பும் நம்மவர்கள் மத்தியில் அதற்கு மேலும் செய்ய முடியும் என்று சாதித்து காட்டி இருக்கிறார் இந்த சிங்.
ஒரு கிழட்டு மனிதரை அறைந்தது பெரிய சாதனை இல்லைதான். ஆனால் ஒரு உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் மத்திய அமைச்சரை பொது இடத்தில் அறைந்தால் விளைவு என்ன ஆகும் என்று தெரிந்து இருந்தும் அதை வீரத்தோடு செய்து காட்டி இருக்கும் சிங் பாராட்ட பட வேண்டியவர். நம்மில் யாரும் "பகத் சிங்கை" பார்த்திருக்க வாய்ப்பில்லை. "youtube" ல் ஹர்விந்தரின் வீடியோ பார்த்த பின் அந்த குறை தீர்ந்து விட்டது.
லாலா லஜபதி ராய் 1928ல் பிரிட்டிஷ் அடக்கு முறையில் அடிவாங்கி இறந்தபோது "பகத் சிங்" எப்படி கொதித்து இருப்பான் என்பதை இந்த ஹர்விந்தர் முகத்தில் காண முடிகிறது.
"மக்கள் பிரதிநிதி " மீது ஒரு கிறுக்கு இளைஞனின் தாக்குதல் என்று இதை கண்டிக்க முடியவில்லை. நம்மால் முடியாததை இவன் செய்து காட்டி விட்டானே என்று அவரை பாராட்டத்தான் தோன்றுகிறது.
இந்த சம்பவத்தால் ஒரே நாளில் ஊழல் ஒழிந்துவிட போவதில்லை. மந்திரி பிரதானிகளுக்கு பாதுகாப்பு கூடும் அவ்வளவுதான். பரவாயில்லை. ஆனால் எந்த நேரம் எந்த பக்கத்தில் இருந்து செருப்பு வந்து விழும் என்று ஒரு அச்சம் எல்லா அரசியல் வாதிக்கும் ஏற்படும் அல்லவா அதுவே ஒரு வெற்றிதான்.
வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகதுதான். ஆனால் தீர்வை துரிதமாக்கும். இல்லாவிட்டாலும் என்ன! கனல் பறக்கும் வசனம் பேசி, கவர்ச்சி நடிகைகளோடு குத்தாட்டம் போட்டு "காசு" சினிமா காரனுக்கு"fan"ஆக இருப்பதை விட ஹர்விந்தர் சிங் FAN என்று சொல்லு கொள்வது பெருமைதான்.
Hats off to Harvindher singh,I too became a FAN to him.Thanks Moorthi for brought this news to my knowledge..Really i very much fond your postings in your blog...Keep on posting.
ReplyDelete