ஒளவையாரின் 'நல்வழி"யை படித்தேன். அந்த காலத்தில் குற்றதிற்கு தண்டனைகள் மிக கடுமையாக இருந்தன போலும். அரசன் விதிக்கும் கை வெட்டும், கால வெட்டும், கழு ஏற்றும் தண்டனைகள் போக, புத்தி சொல்லும் புலவர்கள் கூறும் தண்டனைகள் மிக கடுமையாக இருக்கின்றன. இந்த பாடலை பாருங்கள்.
"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை."
"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை."
எளிய பாடல்தான். விளக்கம் புரிந்திருக்கும்.புரியாதவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.
"வீட்டில் பேய் பிசாசு வந்து சேரும், அவலட்சணமான, துரதிஷ்டமான வேள்ளேருக்கம்பூ, சப்பாத்தி கள்ளி படர்ந்து வளரும், துர் தேவதையாக அறியப்படும் மூதேவி வந்து வாழ்வாள், பாம்புகள் வந்து குடி புகுந்து விடும்" இத்தகைய கொடும் தண்டனைகள் யார் வீட்டில் நிகழும்????
நீதி மன்றத்தில் பொய் சொல்பவர்கள் வீட்டில்தான் இப்படி சகல தண்டனைகள் நிகழும் என்று அவ்வை மூதாட்டி எச்சரிக்கிறார். நீதி மன்றத்தில் பொய் சொல்வதும், பொய் சாட்சி சொல்வதும் எத்தனை பெரிய பாவம் என்பதையும் நீதி மன்றத்தின் மாட்சியையும் இந்த பாடல் உணர்த்துகிறது.
அது போகட்டும். சமீப காலமாக எனக்கு ஒரு புதிய மன நோய் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஒன்றை பற்றி பேசும்போது, அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத மற்ற சம்பவங்கள் நினைவிற்கு வந்துவிடுகிறது. இப்படிதான் அவ்வையார் பாடலை பற்றி பேசும் போது அவசியம் இல்லாத "கனிமொழி, ராசா, சிதம்பரம்,சரத்குமார், சந்தோலியா, நீரா ரடியா, சுரேந்திர பிபாரா,சஞ்சய் சந்திரா, ராஜீவ் அகர்வால், ஷஹிட் பால்வா, ஆசிப் பால்வா, கரீம் மொராணி இந்த பெயர்கள் எல்லாம் ஏன் தோன்றுகிறது என்று புரிந்து தொலையவில்லை
ஏன் புரியவில்லை என்றால் நீ குறிப்பிட்ட அணைத்து பெயர்களும் பொய் சாட்சி,ஊழல் இவைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அதனால்தானடா மக்கு மக்கு
ReplyDeleteஇனிமேலாவது புரிந்து நடந்து கொள்.
"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
ReplyDeleteபாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை."
இது எளிய பாடல்தான்.
விளக்கம் புரிந்திருக்கும்.
புரியாதவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.
" பேய் பிசாசு வந்து சேரும், அவலட்சணமான, துரதிஷ்டமான வேள்ளேருக்கம்பூ, சப்பாத்தி கள்ளி படர்ந்து வளரும்,
(வறண்ட காலத்திலும் பூத்து நிற்பது வெள்ளெருக்கு மட்டுமே
எனவேதான் மற்ற பூ காய் கனி இல்லாது வெள்ளெருக்கு மட்டும் பூக்கும் கொடும்/கெடும் காலம் என்பது விளக்கம்)
துர் தேவதையாக அறியப்படும் மூதேவி வந்து வாழ்வாள், பாம்புகள் வந்து குடி புகுந்து விடும்" இத்தகைய கொடும் தண்டனைகள் எந்த நாட்டில் நிகழும்????
நீதி மன்றத்தில் பொய் சொல்பவர்கள் நாட்டில்தான் இப்படி சகல தண்டனைகள் நிகழும் என்று அவ்வை மூதாட்டி எச்சரிக்கிறார்.
நீதி மன்றத்தில் பொய் சொல்வதும்,
பொய் சாட்சி சொல்வதும்
நீதியே தடம் புரள்வதும்
எத்தனை பெரிய பாவம் என்பதையும்
நீதி மன்றத்தின் மாட்சியையும் இந்த பாடல் உணர்த்துகிறது.
ரபேலில் அவிழ்த்து விடப்பட்ட பொய்
சமீபமாய் அநீதிகளுக்குக்கு துணை சென்ற நீதி
தொடர்ந்து
நாடு சந்திக்கும் பொருளாதார சீர்கேடு
இயற்கை தரும் இன்னல்கள்
இவைகள் எல்லாம் நினைவுக்கு வந்து செல்கிறது ..................... இரணியல் இளையரவி
இங்கே 10 ஆண்டுகாளக ஆண்ட பிடாகளை விட்டுவிட்டீர்களே.
ReplyDelete